செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

அமைச்சர் சிவசங்கர் பேட்டி சென்னை, டிச. 30– தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது, கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும். […]

Loading

செய்திகள்

கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் சென்னை, டிச.30– காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. குறிப்பாக, அறிகுறிகள் உள்ள […]

Loading

செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் 110 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

பதிலடி கொடுப்போம் என செலென்ஸ்கி ஆவேசம் கீவ், டிச. 30– உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்யா–உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள மிகத் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறை […]

Loading

செய்திகள்

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்: வழக்கு தொடுத்த தென்னாப்பிரிக்கா

கேப் டவுன், டிச. 30– இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தைச் செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இஸ்ரேல் அடாவடியாக, காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே நடைபெற்று வரும் இந்தப் போரின் நோக்கம் காசாவிலுள்ள பாலஸ்தீன மக்களை அழிப்பதுதான் எனத் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தென்னாப்ரிக்கா வழக்கு காசாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களை நிகழ்த்துவதாக பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், பன்னாட்டு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 743 பேருக்கு கொரோனா: 7 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 40 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 30– இந்தியாவில் புதிதாக 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3997 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 797 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

நாக்பூர், டிச. 29– இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’ என்று, காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன நாளில் ராகுல் காந்தி உறுதியளித்தார். காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன நாளை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ‘நாங்கள் தயார்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:– நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான […]

Loading

செய்திகள்

தீவுத்திடலுக்கு அலைகடலென திரண்டு வந்த ரசிகர்கள், பொதுமக்கள்: விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி

* ‘சொக்கத்தங்கம் – அது விஜயகாந்த் தான்’ குஷ்பு * ‘விஜயகாந்தின் மனித நேயத்துக்கு நான் ரசிகன்’ ஆர். பாத்திபன் * ‘நான் பார்த்த வள்ளல்’ இசைஅமைப்பாளர் ஸ்ரீகாந்த் சென்னை, டிச. 29– சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள் என அலைகடலென திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதேபோல அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மாலை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2024ல் தவறுகள் திருத்தப்படுமா?

ஆர்.முத்துக்குமார் 2023 ம் ஆண்டு விடைபெறத் தயாராகி விட்ட இத்தருணத்தில் 2024ல் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வந்து விடவில்லை . என்றாலும் அதன் தாக்கம் பலருக்கு ஏற்பட்டாலும் சாதாரண காய்ச்சல் வந்தவர்கள் போல் அதை கவலையின்றி எதிர்கொள்வது நடைமுறையாகி விட்டது. ஒரு சில அசம்பாவித மரணங்கள் ஏற்பட்டது. அது அதன் பின்னணியில் அவருக்கு இருந்த பிற உபாதைகளால் என்பதை உணர முடிகிறது. ஆக 2023 […]

Loading

செய்திகள்

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்: மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, டிச. 29– அனைத்து மதங்களும் அன்பையும் கருணையையும்தான் போதிக்கிறது என்பதால், தேர்தலுக்காக அல்லாமல், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஷக்லா நகரில் உள்ள பாபா லோக்நாத் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர், “நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். உலகில் எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும் கருணையுடன் இருப்பதற்கும் அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்புவதையும் கற்பிக்கின்றன. இந்தியா […]

Loading

செய்திகள்

குஜராத்தில் மது குடிக்க லைசென்ஸ்: 3 ஆண்டில் 58 சதவீதம் உயர்வு

காந்தி நகர், டிச. 29– குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவா்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை மாநில மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை தெரிவித்துள்ளது. அத்துறை வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:– குஜராத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 27,452 பேர் மது உரிமம் வைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 43,470 ஆக அதிகரித்துவிட்டது. மாநில மக்கள்தொகை சுமார் 6.7 கோடியாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது மது […]

Loading