செய்திகள்

திருவிழா, பொதுத்தேர்வுகள் விவரங்களை அரசிடம் கேட்டுள்ளோம்: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை, டிச.12- நாடாளுமன்ற தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் திருவிழா, பொதுத்தேர்வுகள் விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- கடந்த அக்டோபர் 27ந்தேதி முதல் கடந்த 9ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மழை வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள சென்னை பெருநகரப் பொருளாதாரம்

தலையங்கம் புயல் மழையில் மூழ்கி எழுந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருக்கும் சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கி விட்டது. அருவி போல் சிறு ஓய்வின்றி தொடர்ந்து 35 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழைப் பொழிவு என்பது படுமோசமான இயற்கை சீற்றம்; அதன் பாதிப்பு நகர கட்டுமானத்தை சிதைத்திருப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நெளிந்து இருக்கும் வாகனங்களின் முன்பகுதிகள், நாசமாகியிருக்கும் நிலத்தடி கட்டுமானங்கள், பெயர்ந்து போய்விட்ட சாலைகள், மூழ்கிவிட்ட நடைபாதை வர்த்தக நிறுவனங்கள், […]

Loading

செய்திகள்

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: மின்சார ரெயில்களின் சேவை பாதிப்பு

சென்னை, டிச. 11– தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில், செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்றிரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், செங்கல்பட்டு–கடற்கரை இடையிலான மின்சார ரெயில் இயக்கத்தில் பாதிப்பு எற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், நேற்று இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. […]

Loading

செய்திகள்

பிரபலமான உலகத் தலைவர்கள்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

நியூயார்க், டிச. 11– சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் உலகத் தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதம் பேர் பிரதமர் மோடி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகத் திகழ்வதாகவும் அவரது தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளதாகவும் கருத்துக் கூறியுள்ளனர். மோடிக்கு அடுத்ததாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரே மானுவல் லோபஸ் ஓப்ரடார் 66 சதவீத […]

Loading

செய்திகள்

கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது

கோவை, டிச. 11– கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜய், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவம்பர் 27-ம் தேதி இரவு தங்கம், வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்தும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த நிலையில், கொள்ளையன் தருமபுரி, அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. கொள்ளையடித்த நகைகள் […]

Loading

செய்திகள்

நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு: மகன், மகள் பெற்றுக் கொண்டனர்

ஆஸ்லோ, டிச. 11– ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பரிசை நர்கீஸ் முகமதி மகன், மகள் பெற்றுக் கொண்டனர். ஈரானில் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைதான மாஷா அமினி என்ற இளம்பெண், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ஈரான் முழுவதும் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது நர்கீஸ் […]

Loading

செய்திகள்

70,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம்

மும்பை, டிச. 11– மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நடப்பாண்டில் தொடர்ந்து 5-வது முறையாக ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்ததுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக […]

Loading

செய்திகள்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் ‘இப்தார்’ நோன்பு

பாரீஸ், டிச. 11– யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இஃப்தார் என்றால் நோன்பு துறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை 13 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் கூட அருந்தாமல் முழுமையாக நோன்பு இருப்பர். இதே போன்று, ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்கள் நோன்பு திறக்கும் போது உணவு உண்பதை தான் இஃப்தார் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை, டிச.11– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 5 மற்றும் 6 ஆகிய 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 வரை குறைந்த நிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,750-க்கும்,பவுனுக்கு ரூ.120 குறைந்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

செப்டம்பர் 2024–க்குள் தேர்தல் நடத்த உத்தரவு புதுடெல்லி, டிச. 11– ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ன்கீழ் சிறப்பு அந்தஸ்து இருந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி, […]

Loading