செய்திகள்

இந்தியாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 05– இந்தியாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 14 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,383 […]

Loading

செய்திகள்

60 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரியானா பள்ளி முதல்வர் கைது

செய்முறை தேர்வுகளை காட்டி மிரட்டல் சண்டிகர், நவ. 5– பிளஸ் டூ மாணவிகள் 60 பேரை மிரட்டி, பாலியல் அத்துமீறல் செய்த அரியானா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவிகளிடம் செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைத்து விடுவேன் என மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி முதல்வர் கைது இது தொடர்பாக, 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், […]

Loading

செய்திகள்

உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்

பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு மும்பை, நவ. 4– காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.இதில் […]

Loading

செய்திகள்

புதுமண தம்பதி கொலை விவகாரம்: நெல்லை நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

நெல்லை, நவ. 4– புதுமண தம்பதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார். இவரது மகன் மாரி செல்வம் (வயது 23), ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரம் செய்து வரும் முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா (வயது 21) என்பவரை வசந்தகுமார் காதலித்து வந்துள்ளார். ஒரே சமூகத்தை […]

Loading

செய்திகள்

நேபாள நிலநடுக்கம்: பலி 132 ஆக உயர்வு

காத்மண்டு, நவ. 4– நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 132 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் புஷ்ப கமல் நேரில் ஆய்வு […]

Loading

செய்திகள்

துபாயில் டிசம்பர் 19–ந் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்

புதுடெல்லி, நவ. 4– இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) ஏலம் டிசம்பர் 19–ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்தியாவில் நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் […]

Loading

செய்திகள்

சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்றுமுதல் அமல்

இருசக்கர வாகனம், பேருந்து 50 கிலோ மீட்டர்; கார் உள்பட சிறிய ரக வாகனம் 60 கி.மீ வேகம் குடியிருப்பு பகுதிகளில் 30 கி. மீ. வேகம் மட்டுமே சென்னை, நவ. 4– சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. […]

Loading

செய்திகள்

கோவை உயிரியல் பூங்கா மூடல் : பறவைகள், விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு வந்தன

சென்னை, நவ. 4– கோவை உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் அங்கிருந்த பறவைகள், விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து அப்போது முதல் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற பிராணிகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை உயிரியல் […]

Loading

செய்திகள்

காசா மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 15 பேர் பலி

டெல் அவிவ், நவ.4 காசாவில் உள்ள அல்–ஷிபா மருத்துவமனையின் முன்பு இருந்த அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர். அவசர ஊர்திகளில் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ”ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்” என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 04– இந்தியாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 19 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,375 […]

Loading