செய்திகள்

வண்டலூர் அருகே மீண்டும் சாலையை கடந்த 3 முதலைகள்

சென்னை, ஜன. 8–- வண்டலூர் அருகே மீண்டும் 3 முதலைகள் சாலை யை கடந்து சென்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகளில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்த முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் போதெல்லாம் அதனை பொதுமக்கள் பிடித்து வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகும். நேற்று முன்தினம் காலை ஆலப்பாக்கம் சாலையில் […]

Loading

செய்திகள்

முதலீட்டு இலக்குகளை நிர்ணயித்து செயல்பட இதுவே சரியான தருணம்: ரகுராம் ராஜன்

‘தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு’ சென்னை, ஜன. 08– முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட இதுவே சரியான தருணம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ‘தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துக் கொண்டு பேசியதாவது:– தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு […]

Loading

செய்திகள்

வங்கதேச பொதுத் தேர்தல்: 5-வது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா, ஜன. 8– வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் அவரது கட்சியான அவாமி லீக் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை விடுவிக்க குஜராத்துக்கு அதிகாரம் இல்லை

விடுதலையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு காந்தி நகர், ஜன. 08– பில்கிஸ் பானு வழக்கில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் விடுதலை குறித்து, குற்றம் நடந்த மராட்டிய மாநில அரசுதான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர்களை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவு செல்லாது என்றும் கூறி விடுதலையை9 உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2002 ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை, 30 பேர் கொண்ட காவி […]

Loading

செய்திகள்

மோடிக்கு எதிரான சர்ச்சை பேச்சு; மாலத்தீவு தூதருக்கு சம்மன்

புதுடெல்லி, ஜன. 8– பிரதமர் மோடிக்கு எதிரான விவகாரத்தில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீபுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு கடந்த 4-ந்தேதி சென்றார். இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர், லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிரதமர் […]

Loading

செய்திகள்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி: 40 லட்சம் மாணவர்கள் கைப்பேசியில் பார்த்தனர்

சென்னை, ஜன.8– சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்ச்சிகளை 40 லட்சம் மாணவ மாணவியர்கள் கைப்பேசி இணையவழி இணைப்பின் மூலம் கண்டனர். 38 மாவட்டங்களில் 1.60 லட்சம் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரியிலிருந்து எல்.இ.டி. திரை மூலமாக நேரடி ஒளிபரப்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டினை பார்வையிட்டனர். முதலமசசர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். இம்மமாநாட்டில் ஒன்றிய வர்த்தகம் […]

Loading

செய்திகள்

நடிகர் யஷ் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

பெங்களூரு, ஜன. 8– கர்நாடகத்தில் நடிகர் யஷ் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள். கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் நடிகர் யஷ்ஷுக்கு இன்று 38வது பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் ரசிகர்கள் அவருக்கு 25 அடி உயர கட் அவுட் தயார் செய்து இருந்தனர். 10க்கு […]

Loading

செய்திகள்

சென்னையில் தொடர் மழை: புத்தகக் கண்காட்சி இன்று ரத்து: பபாசி அறிவிப்பு

சென்னை, ஜன. 8– சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று புத்தகக் கண்காட்சி நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது. 47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் திடீர் மழை காரணமாக […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 20 பேருக்கு தொற்று டெல்லி, ஜன. 08– இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4002 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 756 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.-வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி திட்டவட்டம்

மதுரை, ஜன.8–- நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது. எனவே சிறுபான்மையினர் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் என மதுரையில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். மதுரை வண்டியூர் சுற்றுச்சாலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதசார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மாநாட்டு மேடைக்கு […]

Loading