செய்திகள்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி: 40 லட்சம் மாணவர்கள் கைப்பேசியில் பார்த்தனர்

சென்னை, ஜன.8–

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்ச்சிகளை 40 லட்சம் மாணவ மாணவியர்கள் கைப்பேசி இணையவழி இணைப்பின் மூலம் கண்டனர்.

38 மாவட்டங்களில் 1.60 லட்சம் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரியிலிருந்து எல்.இ.டி. திரை மூலமாக நேரடி ஒளிபரப்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டினை பார்வையிட்டனர்.

முதலமசசர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். இம்மமாநாட்டில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பான நிகழ்ச்சியை காண்பதற்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 40 லட்சம் மாணவ மாணவியர்கள் மாவட்டங்களில் அலைபேசி மூலம இணையவழியாக பார்வையிட சிறப்பு வசதி செய்யப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய கல்லூரிகள், பள்ளிகள், மாவட்டத் தொழில் மையங்கள், டிட்கோ வளாகம் என பல்வேறு தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 1.60 லட்சம் எண்ணிக்கையிலான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளையும். தொழில் வாய்ப்புகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்திட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இம்மாநாடு தொடர்பான வாட்ஸ் அப் சிறப்புச் செய்திகள் 45 லட்சம் நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வுகளை காண இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மாணவ மாணவியர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *