செய்திகள்

ஒரே டிஎன்ஏ இருக்கையில் வெறுப்பு அரசியல் எதற்கு? – திக்விஜய் சிங் கேள்வி

டெல்லி, ஜூலை 8– ஓவைஸி மற்றும் மோகன் பகவத்துக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கும் நிலையில், மதமாற்ற தடைச் சட்டம் எதற்கு? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லீம் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன் பகவத், ஒரு இந்து, இந்த நாட்டில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக் கூறியானால் அவர் இந்துவே அல்ல. பசு புனிதமான […]

செய்திகள்

எல்.முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,ஜூலை 8– மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல். முருகனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடந்தது. இதில் புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். அவர்களில் இணை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல். முருகனும் ஒருவர். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை […]

செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூலை 8– கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்க ஜனாதிபதி ஜோ பிடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் […]

செய்திகள்

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல்

பாக்தாத், ஜூலை 8– பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று அதிகாலை 2 மணி அளவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை […]

செய்திகள்

52 வது சர்வதேச திரைப்பட விழா: கோவாவில் நவ.20 இல் தொடக்கம்

டெல்லி, ஜூலை 8– 52 வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 ந்தேதி தொடங்கி 28 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும். ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா, இந்த ஆண்டின் […]

செய்திகள்

எப்.டி-யைப் புதுப்பிக்க தவறினால் வட்டி குறையும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி, ஜூலை 8– வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள எப்.டி எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை கணக்குக்கான காலத்தை, புதுப்பிக்க தவறினால் குறைந்தபட்ச வட்டி மட்டுமே வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் மக்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பணத்தை நிரந்தர வைப்புத்தொகையாக வைத்து வட்டி பெறுகின்றனர். இந்த வைப்புத்தொகை 15 நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை வைக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்துக்கேற்ப வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் வங்கிகளுக்கிடையே வேறுபடுகிறது. தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கு […]

செய்திகள்

தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக கட்டணம் வசூலிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை.8- தனியார் பள்ளிகள் 2 கட்டங்களாக 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வலியுறுத்துவதாக பல்வேறு புகார்கள் கல்வித்துறைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு […]

செய்திகள்

கோவையிலிருந்து திருப்பதிக்கு வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரெயில்

சேலம், ஜூலை 8– கோவையில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல், வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து திருப்பதிக்கு வியாழன், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு ரயில் (எண்.06194) இயக்கப்படுகிறது. நாளை 9ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து காலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூருக்கு 6.43 மணிக்கும், ஈரோடுக்கு 7.25 மணிக்கும், […]

செய்திகள்

சென்னையில் 200க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.8- தமிழ்நாட்டில் நேற்று 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு 200க்கும் கீழ் குறைந்தது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,950 ஆண்கள், 1,417 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 367 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக […]

செய்திகள்

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்

சென்னை, ஜூலை 8– தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் […]