போஸ்டர் செய்தி

3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் பலி: பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

Spread the love

புதுடெல்லி,ஜூன்.26–

ஜம்மு–காஷ்மீரில் கடந்த மூன்று ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் 112 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு தீவிரம் காட்டி வருகிறது என உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக அண்மையில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை ஒட்டி அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *