சென்னை, ஜன. 9–
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 13 ந்தேதி வரையில் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழு சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளதாவது:– அலுவல் ஆய்வுக் குழுவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 13 ந்தேதி வரையில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதில்
மேலும், நாளை சட்டப்பேரவையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி அதன் பின்னர் பேரவை ஒத்தி வைக்கப்படும் எனவும் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார் என்றும் கூறி உள்ளார்.