செய்திகள்

மீண்டும் உச்சத்தில் கொரோனா: இந்தியாவில் 1133 பேருக்கு பாதிப்பு

டெல்லி, மார்ச் 22–

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1133 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாத தொடக்கத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 3 வாரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1133 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

4 பேர் பலி

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 662 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7026 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *