ஆர். முத்துக்குமார்
பழைய பாராளுமன்றம் 96 ஆண்டு பழமையானது. இங்கு தினமும் பல லட்சம் பேர் வந்து சென்றாக வேண்டிய சூழ்நிலையில் அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு சேதமடைந்து சரிந்து விடக்கூடாது அல்லவா? அதை மனதில் கொண்டே 2010ல் அப்போதைய காங்கிரஸ் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புதிய பாராளுமன்றத்தை அமைக்க முடிவெடுத்தது.
டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கின. 2021, 2022-ம் ஆண்டு கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது.
தற்போது பணிகள் முடிந்த நிலையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து முறைப்படி வழங்கினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலங்களவையில் 300 எம்.பி.க்கள் அமர வசதி உள்ளது.
அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டு உள்ளது .
புதிய கட்டிடத்தில் பிரம்மாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் உணர்வைக் குறிக்கிறது. பழைய கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை.
இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதிய வளாகத்தின் சிறப்பு அம்சங்களை உற்றுநோக்கும் போது பல பாராட்டுதலுக்குரிய அம்சங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சுற்றிவர வசதிகள் இருக்கிறது. மேலும் முக்கியஸ்தர்களும் உயர் அதிகாரிகளும் சென்று வர பிரத்தியேக நுழைவாயில் அமைந்துள்ளது.
நவீன அதிவேக இன்டர்நெட் சேவை உறுதி செய்யப்பட்டு இருப்பதால் காகிதமில்லாமல் அனைத்து வித பணிகளும் நடைபெற வசதி நிர்மானிக்கப்பட்டும் இருக்கிறது.
அது மட்டுமின்றி முக்கியபிமுகர்களும் பொதுமக்களுக்கும் வந்து செல்ல மிகப் பிரமாண்டமான வாகன நிறுத்தமும் உருவாகி இருக்கிறது.
பழைய கட்டிடத்தின் பரப்பளவு 21,700 மீட்டராகும். தற்போது உருவாகி இருக்கும் பாராளுமன்நமோ 22,900 சதுர மீட்டர் பரப்பளவாகும்.
ஆக முன்பு இருந்த உபயோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு அடுத்த மாதம் முதல் இரட்டிப்பு பரப்பளவில் செயல்பட ஆயத்தமாகி விட்டது.
புதிய வசதிகளுக்காக நாம் புதுப்பித்தோம்; அதை கட்டி முடித்தும் விட்டோம், விரைவில் திறப்பு விழா நடைபெற்று இங்கு பணிகள் மும்முரமாக நடைபெற துவங்கும்.
அந்நாளில் எல்லா பணிகளும் சிறப்புற நடைபெறவே இந்த விரிவாக்கம் என்பதையும் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் உணர்ந்து பாராளுமன்ற செயல்பாடுகள் சிறப்புற செயல்பட துவங்கிட வேண்டும்.