செய்திகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தனியார் மயம் ஆகாது

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் உறுதி

டெல்லி, மார்ச் 15–

இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தனியார்மயம் ஆகாது என்று மாநிலங்களவையில் வைகோ மற்றும் சண்முகம் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ, பாதுகாப்புத்துறை தனியார் மயம் ஆகுமா? பாதுபாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் விவரங்கள் என்ன? என்பது உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பினார்.

தனியார்மயம் ஆகாது

இதற்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த எழுத்து மூலமான விளக்கத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆகாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஏவுகணை அமைப்புகள், தாக்குதல் வான் ஊர்திகள், உடனடிப் பாலங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கு குழிகள் வெட்டுதல், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள், மேம்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் நீரில் மூழ்கிய பொருட்களை, ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை உள்பட பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.