செய்திகள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்

அமைச்சர் வளர்மதி பங்கேற்பு

திருச்சி, ஆக.8–

திருச்சி புறநகர் அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, நவலூர் குட்டப்பட்டு, மணப்பாறை, இனாம் குளத்தூர், நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி ஆகியோர் கலந்துக்கொண்டு தொண்டர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தனர். பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆலோசனைகளை வழங்கினர்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், புறநகர் மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கவுன்சிலர், செல்வராஜ், கிளைக் கழகச் செயலாளர்களும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *