செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் ஒரே நாளில் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை

சென்னையில் பாதிப்பு 1½ லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேர் அடங்குவர்.

அதிகபட்சமாக சென்னையில் 991 பேரும், கோவையில் 498 பேரும், சேலத்தில் 297 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 354 ஆண்களும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 128 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 22 ஆயிரத்து 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 ஆயிரத்து 462 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் என 53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 434 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 65 அரசு மற்றும் 105 தனியார் நிறுவனம் என மொத்தம் 170 நிறுவனத்தில் இதுவரை 59 லட்சத்து 68,209 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 80,123 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 799 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 49,583, செங்கல்பட்டில் 30,743, திருவள்ளூரில் 28,620, கோவையில் 22,662 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *