செய்திகள்

சென்னையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா

சென்னை, ஏப்.10–

சென்னை சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த மார்ச் மாதம் 29ந் தேதி ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சில நாள்களில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த நபர், தி.நகர் பகுதியில் துக்க வீட்டுக்குச் சென்று திரும்பினார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதே போல், மற்றொரு வீட்டில் மதுரைக்குச் சென்று வந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 4 பேரால் அவர்களது குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ளவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் கடைகளில் இருந்து வாங்கி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே குடியிருப்பில் தொடர்ந்து 7 நாள்கள் வரை புதிய பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் தடுப்பு வேலி அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *