செய்திகள்

கச்சா எண்ணெய் விலைக் குறைவு: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சென்னை, ஜூலை 21–

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏழு சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஈராக், குவைத், ரஷ்யா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைந்த, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகளுக்கிடையே, நேற்று முன்தினம் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, ஒபெக் கூட்டமைப்பு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்று அறிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறையுமா?

இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்ப்பார்ப்பு நுகர்வோரிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், 3 நாட்கள் ஆகியும் இன்னும் பெட்ரோல் டீசல் விலையை இந்திய அரசு குறைக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் போக்கே காணப்படுகிறது. இதற்கு ஒரே காரணம், எண்ணெய் மீதான கலால் வரியை அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *