செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

டெல்லி, ஏப். 13–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்தது. 12.64 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 71 ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 89.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.25 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 9.24 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

14 லட்சம் பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,00,122 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 92 லட்சத்து 7 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் 13 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 58 ஆயிரத்து 863 பேர் பலியாகி உள்ளனர். 11 கோடியே 4 லட்சத்து 58 ஆயிரத்து 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *