செய்திகள்

ஒய்.எல்.ஜி. சலூன் 10வது ஆண்டு விழா: பேஷன் ஷோ

Spread the love

சென்னை, டிச.20–

தென்னிந்தியாவில் பிரபலமான ஒய்.எல்.ஜி. சலூன் 10–வது ஆண்டு விழாவையொட்டி பேஷன் ஷோ நடைபெற்றது. நவீன கேச அலங்காரத்தில் மாடல்கள் அணிவகுத்தனர். நவீன பேஷன் சலூன் கலாச்சாரத்தை வழங்கும் இந்த நிறுவனத்தில் 5 லட்சம் பேர் வாடிக்கையாளராக உள்ளனர் என்று துணை நிறுவனர் வைஜெயந்தி பால் சந்திரா தெரிவித்தார்.

இந்த விழாவில் லோரியல் அழகு நிறுவன பொது மேலாளர் பினாய், அரோமா மேஜிக் நிறுவனர் பிளாசம் கோச்சர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஹல் பால் சந்திரா சி.ஐ.ஐ. சிறந்த வாடிக்கையாளர் விருப்ப நிறுவனத்திற்காக விருது பெற்று பாராட்டை பெற்றுள்ளார். இந்த நிறுவன 10 ஆண்டு வளர்ச்சி சாதனைகளை இவர் விவரித்தார்.

இந்த விழாவில் பல்வேறு ரக கவர்ச்சி கேச அலங்காரத்துடன் மகளிர் அணிவகுத்தனர்.

தென்னிந்திய முக்கிய நகரங்களில் 60 சலூன்களை நிறுவி உள்ள இந்த நிறுவனம் புதியதாக இந்தியன் பிரவுன் என்னும் கேச வண்ணத்தை அறிமுகம் செய்து வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒய்.எல்.ஜி. பற்றிய பாடலுக்கு பணியாளர்கள் நடனமாடினர். 5 வாடிக்கையாளருக்கு குலுக்கலில் பாலித் தீவுக்கான சுற்றுலா டிக்கெட் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *