செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 2- பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?


இணையம் – 2.0 கிடுகிடு வளர்ச்சி!


– : மா .செழியன் :–


இணையம் தோன்றிய காலத்தில் பார்வையாளர்களாக அதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்பவர்களாக மட்டுமே இருந்து நிலை மாறி, தகவல்களை சொல்பவர்களாகவும் மாறியதுதான் இணயம்–2.0 அதன் ஒரு பகுதியாக கணினி வலைப்பூக்கள் (Blogs) உருவாகிறது. இணையத்தின் இந்த வளர்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை பதிவிடவும், அதற்கு மறுமொழி பெறவும் வசதி ஏற்பட்டது. இதன் அபார வளர்ச்சியே, இன்றைய முகநூல் எனும் பேஸ்புக், டுவிட்டர், இன்டாகிராம், மெசஞ்சர், டிக்டாக், வாட்ஸ் ஆப், டம்ளர் (tumblr), யூடியூப் என்று ஏராளமான சமூக வலைத்தளங்கள் உருவாகிறது. அதில் பொதுமக்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2000 ஆண்டு தொடங்கி பெரிய உச்சத்தை தொட்டது. பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிக்க, அதிகரிக்க, இணையம்–2.0 மிகப்பெரிய வளர்ச்சியை பெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் இணையத்தால் இணைக்கப்படுகிறது.

கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், ஏடிஎம், யூபிஏ பேமெண்ட் எனும் கூகுள்பே, போன்பே, போன்ற பணப் பரிவர்த்தனைகள், பொருட்கள் வாங்க, அமேசான், பிளிப்கார்ட், அனைத்தும் இணையம்–2.0 மூலமே நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்பால், பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் வெளியாகி பல்வேறு சிக்கல்களும் உருவாகிறது. இதன் மூலம் இணைய குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. ஆனாலும், இணைய உலகின் இந்த வளர்ச்சியை பொதுமக்களால் தவிர்க்க முடியவில்லை.

இத்தகைய பாதிப்புகள் ஏன் உருவாகிறது, இதனைத் தடுப்பது எப்படி என்று, உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள். இணையம் 2.0 வளர்ச்சியில் பங்கேற்கும் நிறுவனங்களின் சர்வர்கள், ஒரு இடத்தில் உள்ளதே இணைய திருட்டு நடைபெற காரணம் என்று கண்டறிகிறார்கள். இணையத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் தகவல்கள், நிறுவனங்களின் தகவல்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டு அதனை மாற்றவோ, திருடவோ முடியாமல் தடுத்தால் இந்த சிக்கல்கள் சரியாகும் என்று எண்ணுகிறார்கள். அதன் வெளிபாடாக கண்டறியப்பட்டதே, வெப்–3.0 என்று அழைக்கப்படும் பிளாக் செயின் தொழில்நுட்பம். 2010 ஆம் ஆண்டு தொடங்கி இதன் ஆய்வுகள் வளர்ச்சி பெறுகிறது. இதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்…


இணையத்தின் தோற்றம்!- பகுதி–1


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *