செய்திகள்

நில அபகரிப்பு, ரவுடியிசம் இல்லாத அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும்

ஆர்.கே.நகரில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

நில அபகரிப்பு, ரவுடியிசம் இல்லாத அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் ஆதரவு தர வேண்டும்

புதிய மகளிர் குழு கலந்தாய்வு கூட்டத்தில் ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள்

சென்னை, ஜன.5–

தண்டையார்பேட்டையில் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு கலந்தாய்வு கூட்டத்தில் தமிழகத்தில் நில அபகரிப்பு, ரவுடியிசம் இல்லாத அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு மகளிர் ஆதரவு தர வேண்டும் என மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 40வது வட்டத்தில் உள்ள புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 750 பேருக்கு புடவை, அரிசி மூட்டை, உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டத்தில் ஆர்.எஸ். ராஜேஷ், பேசியதாவது:– மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற அடிப்படையில் பெண்கள் தனது சொந்த உழைப்பின் மூலம் குடும்பத்தில் தங்களது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என கருதி கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு, பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம், இரு பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி உதவி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, பாட புத்தகம், ஊக்க தொகை, இலவச சைக்கிள், மடிக்கணினி, பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கம், மேலும் 50 ஆயிரம் நிதியுதவி என 12 க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பெண்களுக்கென மகளிர் மேம்பாட்டு கழகம் என ஒரு துறையை உருவாக்கி தந்தவர் அம்மா தான்.

அவரின் வழியில் கொரோனா தொற்று காலத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், உள்ளிட்ட உணவு பொருட்கள் மழையினால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு மூன்று வேளை வகைப்படுத்தப்பட்ட தரமான உணவு, மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறு தொழில் புரிய சிறு கடன் வசதி, புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொங்கல் பரிசு தொகையை 2500 ஆக உயர்த்திய திட்டம் என அம்மாவின் வழியை பின்பற்றி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இன்று 11 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கலந்தாய்வு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வ.உ.சி. நகர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை, எழில் நகர், நேதாஜி நகர், பட்டேல் நகர், உள்ளிட்ட 20 வட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேருக்கு புடவை, அரிசி, உதவி கேட்போருக்கு ஏற்ப அரவை கிரைண்டர் மெஷின், தள்ளுவண்டி, தையல் மெஷின் என வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ரவுடியிசம் இல்லை

இந்தியாவிலேயே தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டி தந்த முதல்வர் எடப்பாடி ஆட்சியில் ரவுடியிசம் கிடையாது, நில அபகரிப்பு கிடையாது, தமிழக மக்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு மகளிர் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என அப்போது கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.கே. நகர் மத்திய பகுதி கழக செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மேற்கு பகுதி கழக செயலாளர் ஆர்.நித்தியானந்தம், தெற்கு பகுதி கழக செயலாளர் எம். என். சீனிவாசபாலாஜி, மற்றும் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *