செய்திகள்

அம்மா மினி கிளினிக்குகளில் நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூர், பிப். 22–

44 அம்மா மினி கிளினிக்குகளில் முதற்கட்டமாக நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ம.ப. சிவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் கலந்து கொண்டு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இணையம் வழியாக நாள்தோறும் 2ஜிபி டேட்டா பயன்படுத்தி கல்வி கற்றிட 20 கல்லூரிகளை சார்ந்த 6761 மாணவ மாணவிகளுக்கு 2ஜிபி டேட்டா கார்டுகளையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 44 அம்மா மினி கிளனிக்குகளின் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திட நோ்காணல் மூலம் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு முதற்கட்டமாக 26 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியுர் மலைகிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையும், திருப்பத்தூர் ஒன்றியம் நெல்லிவாசல்நாடு மலைகிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையும், புதூர்நாடு மலைகிராமத்தில் மவைாழ் மக்களின் பாதுகாப்பிற்காவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினையும் திறந்து வைத்து மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.

அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டும் அரசு மருத்துவமனைகள் நவீன மயமாக்கப்பட்டு பல்வேறு மருத்துவ கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. துமிழகத்தில் 11 மருத்துவகல்லூரிகள் கடந்த ஒரு வருடத்தில் கொண்டு வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதில் தரமான சிகிச்சைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஏழை எளிய கிராம மக்களின் பிள்ளைகளும் மருத்துவராகலாம் என்று நிலையினை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். முதலமைச்சரின் திட்டத்தால் 435 பேர் நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அம்மா மினி கிளினிக்கில் பணியில் சேர்ந்துள்ள மருத்துவர்கள் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களிடம் அன்பாக பழகி சிகிச்சைகளை வழங்கிட வேண்டும். புதிய தரம் உயர்த்தப்பட்ட மலைகிராம பள்ளிகளில் மூலம் சுமார் 250 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இவர்கள் ஆலங்காயம் மற்றும் புதூர் நாடு பள்ளிகளுக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவு வந்து செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புறக்காவல் நிலையத்தின் மூலம் மாலைவாழ் மக்களின் பாதுகாப்பும் குற்ற செயல்கள் தவிர்ப்பதும் உறுதி செய்யப்படும். இதுபோல மக்களின் நிலையினை உணர்ந்த அரசாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் .

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது:

அம்மாவின் நல்லாட்சியில் தமிழகம் கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் கல்வி பயிலும் சதவிகிதம் உயர்ந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வியில் பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகின்றார். ஆரம்ப கட்டாய கல்வி திட்டத்தால் மாணவர்கள் படித்து வாழ்ககையில் முன்னேறி வருகின்றார்கள். தமிழத்தில் ஆன்லைன் வகுப்பு தற்போது நடைப்பெறு கின்றது. ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த 2ஜிபி டேட்டா திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். தமிழம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றது தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு அரசு வழங்கி உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார்., மாவட்ட வன அலுவலர் குமிலிவெங்கட அப்பலாநாயுடு முன்னிலை வகித்தார்கள். பொது சுகாதாரம் துணை இயக்குநர் செந்தில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், கூட்டுறவு பண்டக சாலைத்தலைவர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், கூட்டுறவு சக்கரை ஆலை தலைவர் கே.ஆர்.ராஜேந்திரன், 2ஜிபி டேட்டா கார்டு வழங்கும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மேகலா,ஜெகதீசன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதாரத்துறை நேர்முக உதவியாளர் சங்கரன், திருப்பதி, ரமேஷ், வெள்ளையன், சிவாஜி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், வனச்சரகர் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *