செய்திகள்

140 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட

140 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்:

அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், டிச. 21–

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் கீழ்பேரடிக்குப்பம் ஊராட்சியில் தொடர் மழையின் காரணமாக ஏரி மதகு உடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிசி, பாய், போர்வை, புடவை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, விக்கிரவாண்டி வட்டம் அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில்,தொடர் மழையின் காரணமாகமழை நீரினால் மூழ்கி சேதமடைந்த உளுந்துப் பயிரினையும் மற்றும் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணையினையும் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட திருப்பாச்சானூர், கல்லிப்பட்டுபகுதிகளில் தொடர் மழை காரணமாக தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடுவதையும், தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.35 கோடிமதிப்பீட்டில் புதியதாககட்டப்பட்டுள்ள தடுப்பணையினை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வுசெய்தபோது, அப்பகுதியினை சேர்ந்த, ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இத்தடுப்பணை பெறும் பயனுள்ளதாக இருப்பதாக கூறி, தமிழக அரசிற்கும் மற்றும் அமைச்சருக்கும் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், கடலூர் மாவட்டம் பண்ரூட்டி வட்டம் கண்டரக்கோட்டையில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினையும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் சின்னகள்ளிப்பட்டு, சேந்தனூர், அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம், வடவாம்பலம், குச்சிப்பாளையம், நரசிங்கபுரம் மற்றும் பூவரசங்குப்பம் ஆகிய கிராமங்கள் பயனடையும். மேலும் கடலூர் மாவட்டத்தில், கண்டரக்கோட்டை, அக்கடவள்ளி, பெரியகள்ளிப்பட்டு, பூண்டி, புலவனூர், மேல்குமாரமங்கலம், ஏரிப்பாளையம் மற்றும் குரத்தி ஆகிய கிராமங்களும் பயனடையும். இத்தடுப் பணையால் சுமார் 46,380 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். 728 ஆழ்துளை கிணறுகள் மூலம் 2912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். இத்தடுப்பணை கட்டப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு நீர்மட்டம் வெகுவாக உயருவதோடு, குறைந்து கொண்டே செல்லும் நிலத்தடிநீர் மட்டம் தடுக்கப்படும். மேலும்,விவசாய உற்பத்திஅதிகரிக்கப்படும். சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதி செய்யப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர்-கூடுதல் இயக்குநர் வெ.மகேந்திரன், செயற்பொறியாளர்கள், பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) ஜவகர்,மணிமோகன் (கடலூர்), வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்டஆவின் தலைவர் பேட்டை.வி.முருகன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கலெக்டர் அண்ணாதுரை

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை முகையூர் ஊராட்சி ஒன்றியம் தேவனூர் ஊராட்சியில், தொடர் மழைகாரணமாக ஏரிகள் நிரம்பியதால் ஏரியிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறி குடியிருப்புபகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதனையும், மேலும், அப்பகுதியில் விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலைக்கு இடையே மழைநீர் பெருக்கெடுத்து ஒடுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து காணை ஊராட்சி ஒன்றியத்தில் அகரம்சித்தாமூர் ஊராட்சியில் பம்பையாற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தில் தொடர் மழைகாரணமாக மழை நீரை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை. நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *