கடலூர், பிப். 18–
கடலூரில் கல்லூரி மாணவர் மாணவிகள் இணையவழியில் கல்வி கற்க இலவச 2ஜிபி டேட்டா சிம் கார்டுகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில், அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியதாவது:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 8.1.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகளின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின மூலம் தனியரர் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 16,777 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் புதுப்பிக்கப்பட்ட குத்துச்சண்டை பயிற்சி மேடையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் தெய்வபக்கிரி, பொியரர் கலைக்கல்லூரி முதல்வர் உலகி , மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சிவா, குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் ஹரிபிரசாத், சிவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.