நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது
சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுள் காலம் முடிவதற்குள் சந்திரயான் 3 அனுப்ப வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.
இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்வது உலக நாடுகளிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இஸ்ரோவும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அதனுடைய ஆயுட்காலம் குறைவு என்பதால் நிலவிலேயே ஒரு சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது.
நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமையும் போது, இந்தியாவும் அதில் பங்குகொள்ளும். அதன் முதல்கட்டமாகத்தான் ககன்யான் அனுப்பப்பட உள்ளது