செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்வு

Spread the love

சென்னை, டிச. 25

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 264 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இன்று விடுமுறை என்பதால் தங்கத்தின் விலை தடாலடியாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 33 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,698 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,665 ஆக மட்டுமே இருந்தது. அதேபோல, 29,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29,584 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

தூய தங்கத்தின் விலை

24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.3,880 ஆக இருக்கிறது. நேற்று 3,847 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,776 ரூபாயிலிருந்து இன்று 31,040 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 264 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *