செய்திகள்

டெல்லியில் கடுங்குளிரில் 50வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி, ஜன. 13-

டெல்லியில் நிலவும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 50வது நாளாக போராடி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 50வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம், அதே நேரத்தில் 15ம் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடயே காஞ்சிபுரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாடினர். காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூரில் வேளாண் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *