செய்திகள்

2 நிர்வாகிகள் மறைவுக்கு ஓ.பி.எஸ், எடப்பாடி இரங்கல்

Spread the love

சென்னை, செப்.21–

அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் ஏசுகுமார், ராஜேந்திரன் மரணமடைந்தனர்.

இதையொட்டி அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், செங்கல்பட்டு நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், 25–வது வார்டு செயலாளரும், நகர கூட்டுறவு பால் சங்கத் தலைவரும், நகர மன்ற முன்னாள் வார்டு உறுப்பினருமான குமார் என்ற எல்.ஏசுகுமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி, கோள்ளப்பட்டி கிளைச் செயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

அன்புச் சகோதரர்கள் ஏசுகுமார், ராஜேந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *