சிறுகதை

உறவுக்குடில் | கரூர் அ. செல்வராஜ்

வாடகை வீட்டில் 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர் ரமேஷ்குமார் – ராதிகா தம்பதியினர். அவர்களுடன் ரமேஷ்குமாரின் அம்மா சரஸ்வதி அம்மாவும் துணையாக வாழ்ந்து வந்தார். தாய் சொல்லைத் தட்டாத தனயனாகவும் தாய்க்குப் பின் தாரம் என்பதை அறிந்தவனாகவும் வாழ்க்கையை நடத்தி வந்த ரமேஷ்குமாருக்கு சொந்த வீடு கட்டி சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டுமென்ற கனவு இருந்தது. தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த அவன் தனது சேமிப்பிலிருந்து வாங்கிப் போட்டிருந்த புறநகர்ப் பகுதி வீட்டு மனையில் வங்கிக் கடன் […]

சிறுகதை

புயலில் ஈரம் | ராஜா செல்லமுத்து

நாம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புக்கு எதிராக செயல்படும் இயற்கை. அதை கட்டுப்படுத்தவும் ஒரு கட்டுக்குள் வைக்கவும் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அது தன் போக்கில் தான் போய்க் கொண்டிருக்கும். அந்த போக்கிற்கு வளைந்து வாழ்க்கை நடத்துவதே மனித வாழ்க்கை. இப்படி போய்க்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் ஒரு நாள் புயல் ,மழை கடுமையாக ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம். எங்கு பார்த்தாலும் மழை. அடைத்த வீடுகளை திறக்காத மனிதர்கள். அத்தனை பேர்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் […]

சிறுகதை

அறுபதாம் கல்யாணம்! | வேலூர்.வெ.இராம்குமார்

“என்னங்க!ஏன் இப்படி சோகமா இருக்கீங்க?” கணவனின் தோளைப் பற்றி ஆதரவாக கேட்டாள் மீனாட்சி. “இன்னும் இரண்டு நாள்ல எனக்கு அறுபது வயசு முடியுது. நமக்குன்னு வாரிசுகள் இருந்திருந்தா, நமக்கு அறுபதாம் கல்யாண மணிவிழா கொண்டாடியிருப்பாங்கள்லே? “கண் ஆதங்கத்துடன் கூறினார் மணிராஜ். முகமலர்ந்த மறுகணமே அமைதியானவள், உண்மைதாங்க. இதுபோன்ற வேளைகளில்தான், நாம ஏன் ஒரு குழந்தையை நமக்கும், நம்ம ஆஸ்திக்கும் வாரிசா. தத்தெடுத்து வளர்த்தெடுத்திருக்க கூடாதுங்கற ஆதங்கம் எனக்கும் வரும்ங்க” “பைத்தியம்.. நாம ஒரு குழந்தையை தத்தெடுத்திருந்தா, பல […]

சிறுகதை

நிலத்துடன் வாழ்க | ராஜா செல்லமுத்து

“நிலத்துடன் வாழ்க” என்ற வார்த்தையை தான் அமர்ந்திருக்கும் சுவருக்கு பின்னால் எழுதி சுவரில் ஒட்டி இருந்தார் முரளி. அவரைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் நிலத்துடன் வாழ்க என்ற அந்த வார்த்தையைப் பற்றிக் கேட்காமல் போக மாட்டார்கள். அப்படி ஒருநாள் ஒரு நண்பர் முரளியின் அலுவலகத்திற்கு வந்தார் . அந்த நண்பரின் பெயர் சுரேஷ். அரக்கப் பரக்க தன் நண்பனின் வேலைகளை பார்த்த சுரேஷ், எதேச்சையாக முரளியின் பின்னாலிருக்கும் நிலத்துடன் வாழ்க என்ற வார்த்தையை வாசித்துவிட்டு அந்த […]

சிறுகதை

கல் குவாரி | மலர்மதி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் ஒன்றுகூடினர். “டேய்… இன்னைக்கு நாம பக்கத்து ஊர் கல்குவாரிக்குப் போகலாம்.” என்றான் ப்ரேம். “எதுக்குடா?” என்று கேட்டான் ராஜு. “எதுக்கா? குளிக்கத்தான்.” “ஓ… நான் மறந்தே விட்டேன். போகலாம்டா.” என்றான் ராஜு. கல்குவாரி என்பது பாறைகள் வெட்டி எடுக்குமிடம். அதாவது தங்கச் சுரங்கம், நிலக்கரி சுரங்கம் போன்று கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்துக்குப் பெயர் கல்குவாரி. பாறைகளை வெட்டி எடுத்தப் பிறகு ஆழமான பள்ளங்களில் மழை நீர் தேங்கி […]

சிறுகதை

பரிசோதனை | ராஜா செல்லமுத்து

கொரானா நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்வதற்காக பாரதிதாசன் தெருவில் பரிசோதனைக் கூடத்தை அமைத்திருந்தது அரசாங்கம். அந்த வழியாக போகிறவர்கள் வருகிறவர்கள் அத்தனைபேரையும் வழிமறித்து சோதனை செய்து கொண்டு இருந்தார்கள். சிலர் இந்த சோதனைக்கு பயந்து அடுத்த தெரு வழியாக போய்க் கொண்டிருந்தார்கள். வழக்கமாக பாரதிதாசன் தெருவிலேயே போகும் ஒருவர் இன்னொரு வழியே போய்க் கொண்டிருந்தார். என்ன பிரதர் எப்போதுமே பாரதிதாசன் தெரு வழியாக போவீங்க. ஏன் இன்னைக்கு இந்த தெருவழியே வரீங்க என்று அந்த தெருவில் வசிப்பவர் […]

சிறுகதை

உண்மை! | இரா.இரவிக்குமார்

உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தான் ராகுல். எதிர்வீட்டு மாமா அவனுடன் வேலைபார்க்கும் பிரியாவைப் பற்றிக் கேட்டார். அவளது குணநலன்கள் குடும்பத்திற்கு ஏற்றவைதானா என்று அவன் மேலிருந்த பல வருட பழக்கத்தின் நம்பிக்கையால் கூப்பிட்டு விசாரித்தார். “மாமா, தங்கமான குணம். நல்ல குடும்பம். நம்ம ரகுவுக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவள்” என்று கூசாமல் பொய் சொன்னான் ராகுல். “ராகுல், நாளை ரகு ஸ்டேட்ஸிலிருந்து பதினைந்து நாள் லீவில் வரான். அதற்குள் ரெண்டு மூணு நல்ல இடம் பாத்து ஒண்ண […]