வைரவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் பணத்தை மட்டும் எப்படி கணக்கு கூட்டிக் கொடுக்கிறார் வாங்குகிறார் என்பது வைரவனுக்கு மட்டும் அல்ல அப்பகுதியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத அத்தனை பேருக்கும் அத்துபடி. ஒன்று, இரண்டு என்று எழுதச் சொன்னால் தெரியாத நபர்கள் எவ்வளவு பணத்தையும் ஈசியாக எண்ணி கணக்குப் பார்த்து விடுகிறார்கள் என்பது விஞ்ஞான உலகத்திற்கே ஒரு வியப்பு. வைரவனும் அப்படித்தான் . ஆட்டோ ஏறுகிறவர் இறங்குகிறவர் கொடுக்கும் பணத்தை அவ்வளவு லாவகமாக கொஞ்சம் கூட […]