செய்திகள்

இந்தியாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 04– இந்தியாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 19 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,375 […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணியில் தொய்வா? 5 மாநில தேர்தலுக்கு பின் கூட்டம்

நிதீஷ் குமாருடன் மல்லிகார்ஜூன கார்கே உறுதி டெல்லி, நவ. 4– இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறிய நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 5 மாநில தேர்தலுக்கு பின்னர் கூட்டம் நடத்தப்படும் என்று அவரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ‘இந்தியா’ கூட்டணி பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா கூட்டணி தரப்பில் இதுவரை 3 கூட்டங்கள் நடைபெற்று ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் இடி – மின்னல் தாக்கி 5 பேர் பலி செல்போன் வெடித்து பெண் காயம்

சென்னை, நவ. 5– தமிழகத்தில் இடி – மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள். செல்போன் வெடித்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் […]

Loading

செய்திகள்

மாணவர்களை தாக்கிய பாஜக பெண் நிர்வாகியான நடிகை கைது

சென்னை, நவ. 4– சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக, பாஜக பெண் நிர்வாகியான நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை பார்த்த அரசு பேருந்தை வழிமறித்ததோடு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் அவதூறாக பேசி பாஜக பிரமுகரும் துணை நடிகையுமான ராஞ்சனா நாச்சியார் அர்ச்சனை செய்தார். மேலும் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும்

நல்வாழ்வு சிந்தனை சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும் . சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில்கலந்து மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும் பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மழை விபரீதம்

தலையங்கம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழைப்பொழிவு இயல்புக்கும் குறைவாக இருந்துள்ளது. நாடெங்கும் 6 சதவிகித பற்றாக்கறை உள்ளது. கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் பற்றாக்குறை அதிகபட்சமாக 19 சதவிகிதம் உள்ளது. தென் மாவட்டங்களில் 8 சதவிகித பற்றாக்குறை கண்டு இருக்கிறது. மத்திய பகுதிகளில் குறைபாடு இல்லை. வடமேற்குப் பகுதிகளில் ஒரு சதவிகித பற்றாக்குறை மட்டுமே உள்ளது. 95 சதவிகித மழைப்பொழிவுக்கும் குறைந்து இருந்தால் குறைபாடான மழைப்பொழிவு என கருதப்படும். பருவமழை என்பது தான் தென் ஆசிய நாடுகளின் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித் துறை சோதனை அரசியல் நாடகம்

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி கன்னியாகுமரி, நவ. 3– தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித் துறை சோதனை அரசியல் நாடகம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவரிடம், தொடர்ந்து தமிழக அமைச்சர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இந்த வருமான வரித்துறை சோதனைகளை பொதுமக்களே எப்படி பார்க்கின்றனர், என்பது அனைவரும் அறிந்ததே. […]

Loading

செய்திகள்

ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை தபாலில் அனுப்பி வங்கிக்கணக்கில் செலுத்தலாம்

புதுடெல்லி, நவ.3- 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்காக செப்டம்பர் 30ந்தேதி வரை காலக்கெடு வழங்கியது. பின்னர் இது அக்டோபர் 7ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்கள் மூலம் இந்த நோட்டுகளை மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என அறிவித்தது. இந்த அலுவலகங்களில் இருந்து தூரத்தில் வசிப்பவர்களுக்கு தற்போது மேலும் ஒரு சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 2,000 […]

Loading

செய்திகள்

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: மற்றொரு மிசோரம் கட்சியும் அறிவிப்பு

ஐஸ்வால், நவ. 03– மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என, மற்றொரு மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் அறிவித்திருப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் நிற்கிறது. […]

Loading

செய்திகள்

தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கரில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி, நவ. 03– தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ந் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ந் தேதியும் தேர்தல் […]

Loading