செய்திகள் நாடும் நடப்பும்

மழை விபரீதம்


தலையங்கம்


நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழைப்பொழிவு இயல்புக்கும் குறைவாக இருந்துள்ளது. நாடெங்கும் 6 சதவிகித பற்றாக்கறை உள்ளது. கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் பற்றாக்குறை அதிகபட்சமாக 19 சதவிகிதம் உள்ளது. தென் மாவட்டங்களில் 8 சதவிகித பற்றாக்குறை கண்டு இருக்கிறது.

மத்திய பகுதிகளில் குறைபாடு இல்லை. வடமேற்குப் பகுதிகளில் ஒரு சதவிகித பற்றாக்குறை மட்டுமே உள்ளது.

95 சதவிகித மழைப்பொழிவுக்கும் குறைந்து இருந்தால் குறைபாடான மழைப்பொழிவு என கருதப்படும்.

பருவமழை என்பது தான் தென் ஆசிய நாடுகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அதிமுக்கிய இயற்கை நிகழ்வாகும். குறிப்பாக இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் இதை நம்பியே இருக்கிறது.

மழைப் பொழிவு குறைபாடுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, தட்ப வெப்பமும் சீராக இருப்பது இல்லை. பருவமழை அதிகமாக இருந்தால் நாடெங்கும் வெள்ளக் காடாக மாறி பயிர்களை அழித்துவிடும். மேலும் கட்டுமானங்களை சேதப்படுத்தியும் விடும். பல்வேறு நீர் சார்ந்த கிருமி பரவல்கள் அதிகரித்து ஆரோக்கிய சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.

குறைபாடான பருவமழை ஏற்பட்டாலும் பயிர் வாடி நாசமாகும்! கால்நடைகள், பண்ணை வளர்ப்பு உயிரினங்களும் அழிந்து விடும். இதன் தொடர்ச்சியாய் ஏதேனும் புதுப்புது கிருமிகள் உருவாகி ஆரோக்கியச் சீர்கேட்டை ஏற்படுத்தலாம்.

நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நிலத்தடி நீரை அதீதமாக உபயோகிக்க வேண்டிய நிலையில் குடிநீர் உப்புத் தன்மை பெற்று, குடிக்க முடியாத நீராகவும் மாறத் துவங்கிவிடும்.

அடுத்தது அக்டோபர், நவம்பரில் வர இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு வடஇந்தியாவும் அருகாமை மாநிலங்களும் தயாராகி வருகிறது.

வடகிழக்கு பருவமழை ‘எல் நினோ’ நிலைகொண்டு இருப்பதால் படுதீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு எல்லைகளை ஓரளவு சந்தித்து வரும் நேரத்தில் பருவமழை அன்றாட வாழ்வில் புயலாய் வந்து நாச முகத்தை காட்டினால் நம்மால் எதிர்த்து நிற்க முடியுமா? என்பது கேள்விக்குறி தான்.

இதற்கான விடைகளை தெரிந்து கொள்ள நமது புது தலைமுறை நிலைமையை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகுகிறது.

இப்படி பின்புல முயற்சியால் நீர் சவால்களை சமாளிக்க முடியும். மாணவர்களுக்கு புரிதல் வந்தால் அந்த துறையில் ஈடுபாடு பெற்று புதிய கோணத்திலும் சிந்தித்து செயலாற்ற உதவியாக இருக்கும்.

நீர் பஞ்ச காலத்தில் எப்படி செயல்பட வேண்டும்? மழை வெள்ளப் பெருக்கு காலக்கட்டத்திலும் யாரும் எதையும் இழக்காமல் இருக்க வழிகளும் பஞ்ச காலத்தில் எடுக்க வேண்டிய செயல் திட்டங்களையும் நன்கு புரிந்து, உணர்ந்து செயல்படுத்தினால் வருங்காலங்களில் பொருளாதார முற்றுகை முதல் நம் நாட்டின் மீது எந்த மறைமுக தாக்குதல்களையும் நடத்த அஞ்சுவார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *