செய்திகள்

டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து: ரஷ்ய அதிபர் அலர்ட்

மாஸ்கோ, நவ. 29– அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து இருப்பதால், கவனமாக இருக்கும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ், டொனால்ட் டிரம்ப் இடையேயான போட்டியில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என ரஷ்ய […]

Loading

செய்திகள்

ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, நவ. 29– ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வினை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆன்லைனில் தேர்வு ஜனவரி 27 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் முன்கூட்டியே ஜனவரி 5ம் தேதி […]

Loading

செய்திகள்

சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

மதுரை, நவ. 29– மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது. அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னை, நவ. 29– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.1,760 வரை குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் […]

Loading

செய்திகள்

இங்கிலாந்தில் ஜாக்பாட் லாட்டரியில் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.1804 கோடி பரிசு

லண்டன், நவ. 29– இங்கிலாந்தில் ஜாக்பாட் லாட்டரியில் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவர் 1804 கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற லாட்டரிகளில் ஒன்று யூரோ மில்லியன் லாட்டரி. இதற்கான குலுக்கல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 07, 11, 25, 31, 40, மற்றும் லக்கி ஸ்டார்ஸ் 09 மற்றும் 12 ஆகியவற்றை உள்ளடக்கிய வெற்றி எண்கள் ஜாக்பாட் பரிசு வென்றுள்ளன. அதன்படி 177 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாயில் 1804.161 […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் இஸ்கான் பூசாரி கைது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

டாக்கா, நவ. 29– இந்து பூசாரி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்கள் முன்பு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். இடஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஷேக் ஹசீனா கண்டனம் மேலும் […]

Loading

செய்திகள்

பெங்கல் புயல் நாளை பிற்பகலில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகிறது மணிக்கு 90 கி.மீ. வேகத்தி்ல் காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை, நவ. 29– வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய […]

Loading

செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி, நவ. 29– முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2001 – 2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி, மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேல் , ஹெஸ்பொலா இடையே சமரசம்: பைடன் திட்டம் என்ன?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல்கள் நிறைவடைந்ததாக சில சமயங்களில் அறிவிக்கப்பட்டாலும் கடந்த காலத்தில் இந்த முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம்– 1701 நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் ஆயுத குழுக்களை தடை செய்யவும், அப்பகுதியில் அமைதி காக்குமிடம் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு தரப்பினரும் இந்தத் […]

Loading

செய்திகள்

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்: ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

சென்னை, நவ. 28– வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், […]

Loading