செய்திகள் முழு தகவல்

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணிநிலைப்பு செய்ய வேண்டும்!

சென்னை, செப்.2– என்.எல்.சி. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல… மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து

ஐதராபாத், செப் 2 ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ததையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, […]

Loading

செய்திகள் முழு தகவல்

சிறீலங்கன் ஏர்லைன்சின் 45 வது ஆண்டு விழா

சென்னை, செப் 01 சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையை தொடங்கிய, தனது 45 வது ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ந்தேதி தனது விமான சேவையை தொடங்கியது. அப்போது, ஏர் லங்கா என்ற பெயரில் விமான சேவையை தொடங்கிய இலங்கை, இன்று 62 நாடுகளில் 114 நகரங்களுக்கு தனது சேவையை விரிவாக்கி, உலகலாவிய விமான சேவை நிறுவனங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து சிறீலங்கன் […]

Loading

செய்திகள் முழு தகவல் வர்த்தகம்

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ ஓமியம் நிறுவன உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39 ஆயிரத்துக்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மானுடவியல் புலம் நிறுவனம் சென்னை

ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சென்னை சிட்டி கேம்பஸ் இணைந்து 2 நாள் பயிற்சிப் பட்டறை சென்னை, செப். 1 எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் சென்னை சிட்டி கேம்பஸில் அறிவியல் மற்றும் மானுடவியல் புல ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாநில அளவிலான 2 நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது. இப்பயிற்சிப்பட்டறையில் மாலிக்குலர் கேஸ்ட்ரானமி, கோல்டு கட்ஸ், பிளேட்டிங் ஆர்ட்டிஸ்ட்ரி உள்ளிட்ட […]

Loading

செய்திகள் முழு தகவல் வாழ்வியல்

பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி அப்போலோ 5வது சர்வதேச அறுவைசிகிச்சை கருத்தரங்கு

சென்னை, செப். 1– பெருங் குடல் அறுவை சிகிச்சை சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கை இந்தியாவின் முன்னணி மருத்துவமான அப்போலோ மருத்துவமனை அதன் ஐந்தாவது பதிப்பாக சென்னை ஹையாட் ரீஜென்சி ஓட்டலில் நடத்தியது நேற்று முன்தினம் துவங்கிய கருத்தரங்கு, இன்றோடு நிறைவு பெறுகிறது. அப்போலோ பெரும் குடல் புற்று நோய் (ஏ ஆர் சி) செயல் திட்டத்திலிருந்து படைத்திருக்கும் மருத்துவ விளைவுகள் ஆமணத்தின் வெளியீடு இக்கருத்தரங்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.’ அப்போலோ புரோட்டான் கேன்சரின் ஏஆர்சிசெயல்திட்டம்பெருங்குடல் புற்றுநோய் […]

Loading

செய்திகள் முழு தகவல்

வாசகர்களின் பாராட்டுகளுடன் 53வது ஆண்டில் மக்கள் குரல்

சென்னை , அற்புதமான 52 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக 53வது ஆண்டில் (செப் 3) வெற்றிப் புன்னகையோடு அடி எடுத்து வைக்கும் “மக்கள்குரலு”க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன், மதிப்பிற்குரிய மக்கள் குரல் ஆசிரியர் அவர்களுக்கும் அன்போடு ஆதரவளிக்கும் ஒவ்வொரு மக்கள் குரல் வாசகர்களுக்கும் பணிவன்புடன் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் என் எண்ணங்களை இந்த நன்நாளில் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகம் வரலாற்றில், பல காலகட்டங்கள் புரட்சியுடனும் நாட்டு பற்றுடனும் வளர்ச்சிக்கான தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

சென்னை அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு:ஒளவை நடராசன் பெயர்

சென்னை, ஆக 30– தமிழறிஞர் ஒளவை நடராசன் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணாநகர் கிழக்கு (ஜே 82) 2வது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றிட அரசின் அனுமதி பெறப்பட்டது. செய்யாறில் உலகம்மாள் − உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி பிறந்தவர் ஒளவை நடராசன். தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய […]

Loading

செய்திகள் முழு தகவல்

போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வறை திறந்து வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர், ஆக. 31– தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் வடலூர் பணிமனையில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட். கடலூர் மண்டலத்திற்குட்பட்ட வடலூர் பணிமனையில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, வடலூர் பணிமனையில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

இரட்டை இலை சின்னம் வாங்கி தருவதாக பண மோசடி செய்த சுகேஷூக்கு ஜாமீன்

டெல்லி, ஆக. 31– இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக பண மோசடி செய்த சுகேஷூக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை பறித்தது உட்பட பல்வேறு மோசடி வழக்குகள் தொடர்பாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் தான் மோசடியாக சம்பாதித்த பணத்தை பாலிவுட் நட்சத்திரங்களுக்கு செலவு செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு […]

Loading