வாழ்வியல்

பூண்டு டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!–2

Spread the love

பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.

சளி, இருமல், நெஞ்சு சளி மற்றும் இரவு நேரத்தில் தூங்க முடியாதவாறு சுவாசிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், பூண்டு டீயை ஒரு கப் குடியுங்கள். இது அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளையும் அண்ட விடாமல் தடுக்கும்.

முதுமையை தாமதப்படுத்தும்

ஒருவரது சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்பட்டால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். வயதான காலத்தில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் பிரச்சனையில்லை.

பூண்டு டீயை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

ஆய்வுகளில் பூண்டில் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பூண்டு டீயை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கல்லீரல் ஆரோக்கியம்

பூண்டு டீயை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் நீண்ட நாட்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும். பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினிகயம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *