செய்திகள்

25 சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறுவும் வசதியுடன் ஆவடி – பட்டாபிராம் டைடல் பார்க் பணி தீவிரம்

சென்னை, மார்ச் 1

சென்னை அருகே ஆவடி பட்டாபிராமில், ரூ. 280 கோடி திட்டமதிப்பீட்டில் 21 தளங்களைக் கொண்ட டைடல் பார்க் நிறுவுவதற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பணி களும் நிறைவுசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், 2022 மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடித்து டைடல் பார்க்- செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார்.

தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் க. பாண்டியராஜன், “டைடல் பார்க் என்ற இந்த செயல்திட்டம் முதல்வர் எடப்பாடி ஆவடி தொகுதிக்கு தந்த பெரு நிறுவனமாக இருக்கிறது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவின் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது இங்கிருந்து சிறுசேரிக்கும் மற்றும் ஓஎம்ஆர்- க்கும் பணிக்காக சென்று வருகிற தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்கள், அலைச்சலின்றி இங்கேயே பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முதல் கட்டத்திலேயே குறைந்தது 25 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பூங்காவில் தங்களது செயல்பாடு களை தொடங்குகிற வாய்ப்பு உருவாகி யிருக்கிறது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா இங்கு நிறுவப்படுவதன் வழியாக “சாஃப்ட்வேர்” பகுதி என ஆவடி பட்டாபிராம் பகுதிக்கு உருவாகும் என்றார்.

பட்டாபிராம் பாலத்திலிருந்து அன்னனூர் பாலம் வரை ரூ. 1000 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் வெளிப்புற சுற்றுச்சாலையை முதல்வர் ஏற்கனவே தொடங்கி வைத்திருக்கிறார். சி.டி.எச் சாலையை 6 வழி சாலையாக உருமாற்றம் பெற்று வருகிறது. சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு வருவதால் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் ஆர்வத்தோடு இப்பகுதிக்கு வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், ஆவடி தொகுதிக்கு துறைமுகத்திற்கான இணைப்பு வசதியும் இருக்கிறது. வெளிப்புற சுற்றுச்சாலை அருகில் அமைந்திருப்பதால் இங்கிருந்து 20 நிமிடத்தில் காட்டுப்பள்ளியை சென்றடைவதற்கு நேரடியான இணைப்பு வசதி உருவாக்க பட்டுள்ளது. நெமிலிச்சேரியில் கன்டெய்னர் முனையம் அமைப்ப தற்கான திட்டத்திற்கும் முதல்வர் உயிர் தந்திருக்கிறார். ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என மூன்று பரிமாணங்களையும் கொண்ட தொழில் வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புக்கான சாத்தியம் ஆகியவைகள் சங்கமிக்கிற ஒரு தொகுதியாக ஆவடி இப்போது உருமாற்றம் பெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *