செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர், நவ. 21–

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில், சமையலர் மற்றும் துப்புரவாளர் (தொகுப்புதியம்) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக உள்ள 11 சமையலர் பணியிடங்கள் (காலமுறை ஊதியம்) 15700- – 50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700 – ஊதியத்திலும், துப்புரவாளர் (தொகுப்புதியம்)- 4 காலிப் பணியிடங்களுக்கு ரூ.3000- என்ற ஊதியத்திலும் ஆகிய காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான நபர்கள் திருவள்ளுர் மாவட்டம், திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 4.12.2020-க்குள் விண்ணப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *