செய்திகள்

80 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா–2023: பெங்களுருவில் நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு, பிப். 12–

ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்

பிரதமர் மோடி நாளை கர்நாடக மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 9:30 மணியளவில், பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமானப்படை தளத்தில் 14 ஆவது ஏரோ இந்தியா 2023 நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை என்பதாகும்.

இந்திய பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர்தா-தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் முக்கியத்துவமும் இதில் முன்னிறுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் நாட்டின் வடிவமைப்புத் தலைமைத்துவம், யுஏவித் (ஆளில்லாத விமானம்) துறையில் வளர்ச்சி, பாதுகாப்பு விண்வெளி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்கொணரும் விதமாக அமையும்.

மேலும், இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்சிஏ)-தேஜாஸ், எச்டிடி-40, டோர்னியர் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர் (எல்யுஎச்), லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்) மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படும்.

80 நாடுகள் பங்கேற்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், மேம்பாட்டுடன் கூடிய உற்பத்திக்காக இணைந்து செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரோ இந்தியா 2023-ல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும். ஏரோ இந்தியா 2023இல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது.

கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களும் அடங்கும். இது நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *