செய்திகள்

நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு: 5 பேர் கோர்ட்டில் சரண்

Spread the love

காஞ்சீபுரம், அக். 10–

காஞ்சீபுரம் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 5 பேர் வேலூர் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்தவர் கருணாகரன் (26), காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

8ந்தேதி மாலை நிதி நிறுவனத்தில் கருணாகரன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலை செய்யும் விக்கி என்பவரும் உடனிருந்தார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து கருணாகரனை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலூர் குற்றவியல் கோர்ட்டில் இக்கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சரணடைந்தனர். அவர்கள் பெயர் வருமாறு: மணிமாறன் (25), மற்றொரு மணிமாறன் (21), பூச்சி என்கின்ற விஜய் (20), காந்தி (22), துளசிராமன் (22). இவர்கள் அனைவரும் காஞ்சீபுரம் அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர்கள்.

வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடந்த 5 பேரையும் விரைவில் பெரிய காஞ்சீபுரம் போலீசார் போலீஸ் கஸ்டடி எடுத்து எதற்காக கருணாகரனை கொலை செய்தார்கள் என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *