செய்திகள்

புதுவையில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை, ஜன. 7 –

புதுவையில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 15 பேர் புதுவையிலும் 7பேர் காரைக்காலிலும் ஒருவர் ஏனாமிலும் 12 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் ஒருவர் இறந்தார். இன்று மட்டும் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 359 ஆனது. இவர்களில் 108 பேர் புதுவையிலும் 9 பேர் காரைக்காலிலும் ஒருவர் ஏனாமிலும் 31 பேர் மாகேயிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 210 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கிச் சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுவரை தொற்று பாதித்து அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மொத்தம் – 38 369 பேர். அவர்களில் 636 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் – 37 374 பேர் ஆவார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *