செய்திகள்

215 கி.மீ. வேகத்தில் காரில் பயணம்: ரோகித் சர்மாவுக்கு அபராதம்

புனே, அக். 19–

215 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இரண்டு போட்டிக்கும் இடையில் சுமார் நான்கு நாட்கள் இடைவெளி இருந்ததால் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக மும்பை சென்றதாக தெரிகிறது. நேற்று மீண்டும் அணியுடன் இணைய சொகுசு காரில் வந்துள்ளார். அவர் மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் மின்னல் வேகத்தில் வந்துள்ளார்.

இந்த சாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 200 கி.மீ. வேகத்தையும் தாண்டி, 215 கி.மீ. வேகத்தில் அவரது கார் வந்துள்ளது. ரோகித் சர்மாவின் லம்போர்கினி காரானது வேகமாக சென்றது 3 இடங்களில் காவல் துறையினர் வைத்திருந்த வேகத்தை அளக்கும் கருவியில் பதிவாகியிருக்கிறது. அதன் மூலமாக அந்த காருக்கு ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் 3 முறை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வாகனம், போக்குவரத்து விதிமுறையை மீறியதற்கான மூன்று அபராத ரசீதை பெற்றுள்ளது ரோகித் சர்மா சென்றது லாம்போர்கினி உருஸ் சொகுசு கார். இந்த வாகனத்தின் நம்பர் 264 ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *