புதுடெல்லி, பிப்.8–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்-டுள்ளனர்.
தொற்றில் இருந்து மேலும் 11,904 பேர் குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 505-ஆக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் 1 லட்சத்து 55 ஆயிரத்து 80 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு மீண்டும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.20 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.43 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.37 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 236 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 20 கோடியே 19 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் நாடு முழுவதும் இதுவரை 58 லட்சத்து 12 ஆயிரத்து 362 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.