செய்திகள்

மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் சூளுரை: வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத், டிச. 06–

மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் அடாவடியாக சூளுரைக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து காஷ்மீரில் அவ்வப்போது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

வைரல் வீடியோ

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, இந்தியாவை ஆக்கிரமித்து, இந்தியப் பிரதமர் மோடியை சங்கிலியால் பிணைத்து பாகிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறும்போது, அருகில் இருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகக் குரல் எழுப்புகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியாவின் ஆட்சியாளர்கள் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறியுள்ளார். இதே போல் வீடியோ பலமுறை பாகிஸ்தான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியான வீடியோக்களில் இந்திய பிரதமர் இழிவுபடுத்தப்படுவார் என்ற போதிலும் தற்போதைய வீடியோ வைரலாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *