செய்திகள்

5 மாநில தேர்தல்: காங்கிரஸ் 3 மாநிலங்களுக்கு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி, அக். 15–

அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோதலையொட்டி, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

3 மாநில முதற்கட்ட பட்டியல்

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 17 ந்தேதி நடைபெற உள்ளது. 230 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்கட்டமாக 144 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா முதற்கட்டமாக 136 வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நவம்வர் 30 ந்தேதி நடைபெற உள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில், முதல்கட்டமாக 55 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நவம்பர் 7 மற்றும் 17 ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்கட்மாக சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல்வர் பூபேஷ் பாகேல் படானிலும், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அம்பிகாபூரிலும் போட்டியிடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *