செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ஜனவரி 12 வரை பள்ளிகள் மூடல்

22 ரெயில்கள் தாமதம

புதுடெல்லி, ஜன. 7–

வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு வேளையில் குளிரின் அளவு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி – டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்தன.

இதற்கிடையே, டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. கடுமையான குளிர் காலநிலை காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 10ம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *