செய்திகள்

சமூக வலைத்தள தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல: மும்பை ஐகோர்ட்

மும்பை, நவ. 29–

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை தடுக்க, மகாராஷ்டிர அரசுக்கு உத்தர விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோர்படே என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்தார்.

ஏற்க முடியாது

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குறிப்பிடபட்டுள்ள இறந்தவர்களின் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் திரட்டியதாக கூறவே, நீதிபதிகள் கண்டித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் எந்த ஒரு தகவல்களையும் பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *