செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: சவரனுக்கு ரூ.720 உயர்வு

சென்னை, நவ. 29–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளதால், வரலாறு காணாத உச்சத்துடன் ரூ.46,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அண்மையில் ஏற்றத்தாழ்வுடன் இருந்து வந்த நிலையில், சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,780-க்கும், ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனையாகி வந்தது.

சவரனுக்கு ரூ.720 உயர்வு

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.46,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம், சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை இன்று 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 82.20-ஆகவும் ஒரு கிலோ ரூ.82,200-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *