செய்திகள்

குலசை முத்தாரம்மன் கோவிலில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்: போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி, அக். 22–

குலசை முத்தாரம்மன் கோவிலில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் குலசேகரன் பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் களை கட்டும். கோ தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் இந்த விழா நடைபெறும். பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும்போது அணியக்கூடிய மாலையானது, அவர்கள் கடலில் சென்று நீராடும்போது வாங்கிக் கொள்வார்கள். இதற்காக குலசேகரபட்டினம் கடற்கரையில் நரிக்குறவர் இனத்தினர் ஏராளமானவர், தற்காலிகக் கடைகளை அமைத்து மாலைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 ஆம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களில் ஒருவரான அண்ணாமலையின் மனைவி அம்சவல்லி, சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே தங்கி ஊசி, பாசி உள்ளிட்டவற்றைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு அம்சவள்ளி தனது 2-வயது குழந்தையை அருகில் படுக்க வைத்து விட்டு தூங்கியுள்ளார். காலையில் விழித்து பார்த்த போது தனது குழந்தையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அம்சவள்ளி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையை கடத்தி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவில் திருவிழாவின் போது 2-வயது குழந்தை கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் குலசேகரன்பட்டினம் கோவில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *