செய்திகள்

உதகை தாவரவியல் பூங்காவில் 126–-வது மலர் கண்காட்சி: தலைமை செயலர் துவக்கினார்

உதகை, மே 10–

உதகை தாவரவியல் பூங்காவில் 126–வது மலர் கண்காட்சி மற்றும் 19–வது ரோஜா காட்சியை தலைமை செயலர் சிவதாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உதகை மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்திலான டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி மற்றும் அந்த கதாபாத்திரத்தில் வரும் சிறுவர்கள் ஆகியவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் உதகை மலை ரெயில் குகையில் இருந்து வெளியில் வருவது போல 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் மலர்களை கொண்டு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 126 வது மலர் கண்காட்சி மலர் பதாகை முப்பதாயிரம் கொய் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மலர் அலங்கார மேடைகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 72 இனங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *