செய்திகள்

இந்தியாவில் காற்று மாசால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம்

இங்கிலாந்து மருத்துவ இதழ் ஆய்வு தகவல்

டெல்லி, நவ. 30–

திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக மருத்துவ ஆய்வு இதழான பிஎம்ஜே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை குறித்து, மருத்து இதழான பிஎம்ஜே ( British medical journal) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சீனாவில் மட்டும் 24.4 லட்சம் மக்கள் காற்று மாசால் உயிரிழந்து வருகின்றனர்.

புகையால் 50 லட்சம் பேர் பலி

தொழிற்சாலைகள், மின் ஆற்றல் உற்பத்தி மையங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் புதைபொருள் எரிபொருள்களால் (பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை) மட்டும் 50 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

2019-ல் பெறப்பட்ட தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும் புதுப்பிக்க இயலாத எரிபொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் காற்று மாசு என்பது 61 சதவீதம் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக உருவாகும் காட்டுத் தீ, பாலைவன துகள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து மனிதர்களால் கண்டறியப்பட்ட எரிபொருள்கள் பயன்பாட்டைக் கட்டுபடுத்தினாலே 82 சதவீத உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். திறந்தவெளிக் காற்று மாசால் இருதய நோய்கள், மாரடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் சர்க்கை நோய்- பெரும்பாலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *