செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை, மார்ச் 13–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி சவரன் ரூ.49 ஆயிரத்து 200-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *