செய்திகள்

விவசாய விளை பொருட்கள் தரத்தை கண்காணிக்க ‘டிரேஸ் நெக்ஸ்ட்’ நவீன தொழில் நுட்பம் அறிமுகம்

சென்னை, ஆக.1–

சோர்ஸ் டிரேஸ் நிறுவனம் விவசாய நிறுவனங்களுக்கு உற்பத்தியை பெருக்கவும், தரமான விளை பொருட்கள் கலப்படமின்றி பாதுகாப்பான உணவுப் பொருளாக உத்திரவாதத்துடன் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம் விளை பொருட்கள் அனைத்து நடவடிக்கையையும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் வசதியை கொண்டுள்ளது என்று இதன் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி வெங்கட் மரோஜ் தெரிவித்தார்.

இந்த நிறுவனம் பழங்கள், காய்கறி, பல்வேறு மசாலா, தேன் போன்றவற்றை உற்பத்தியிலிருந்து தரத்தை கண்காணித்து வாடிக்கையாளருக்கு சப்ளை வரை தரத்தை உத்திரவாதம் அளிக்கிறது.

சோர்ஸ் டிரேஸ் நிறுவனம், விவசாய துறையில் சாப்ட்வேர் வசதி அறிமுகம் செய்துள்ள ‘ஏஜி நெக்ஸ்ட்’ என்ற நிறுவனத்தின் ‘குவாலிக்ஸ்’ என்னும் தளம் மூலம் ஒரு நிமிடத்தில் ஒரு விவசாய பொருள் உற்பத்தி செய்வது முதல், தற்போது உள்ள தர நிலையை விளக்குகிறது.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து டிரேஸ் நெக்ஸ் தளம் உருவாக்கி, விவசாய பொருள் உற்பத்தியானது தற்போது எங்கு உள்ளது, அதன் தரம் தற்போது எப்படி உள்ளது என்று அறியும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது என்று ஏஜி நெக்ஸ் தலைமை அதிகாரி தரண்ஜீத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *